/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கனிம வளங்கள் கடத்தல் நடவடிக்கை கோரி மறியல்
/
கனிம வளங்கள் கடத்தல் நடவடிக்கை கோரி மறியல்
ADDED : டிச 21, 2025 06:47 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அருகே, கனிம வளங்கள் கடத்துப-வர்கள் மீது நடவடிக்கை கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ஊராட்சி பி.துரிஞ்-சிப்பட்டி வெள்ளாளப்பட்டி கிராமத்தில், 1.39 ஏக்கர் அரசு புறம்போக்கு கல்லாங்குத்து நிலம் உள்ளது. அந்த இடத்தை, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள, வீடு இல்லா ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்க வருவாய் துறை மூலம், முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்-பட்டுள்ளது.
இதையடுத்து சிலர், அந்த இடத்தை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், அங்குள்ள மண் மற்றும் கருங்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை, அரசு அனுமதி-யின்றி எடுத்து செல்கின்றனர். இவர்கள் மீது நட-வடிக்கை கோரி, புரட்சி பாரதம் கட்சியின் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பாப்பி-ரெட்டிப்பட்டி ஒருங்கிணைப்பாளர் சுகுமார் ஆகியோர் தலைமையில், பொதுமக்கள், பொம்-மிடி - பாப்பிரெட்டிப்பட்டி மெயின் ரோட்டில், பி.துறிஞ்சிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை, 4:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்-டனர்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்-கக்கோரி கோஷமிட்டனர். அவர்களிடம், பொம்-மிடி போலீஸ் எஸ்.ஐ., மாரப்பன், வருவாய்த்-துறை ஆர்.ஐ., விமல், வி.ஏ.ஓ., குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மண், கற்கள் கடத்துப-வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர்கள் உறுதி அளித்ததின் படி, மக்கள் மறி-யலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

