sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ குடிநீர், அடிப்படை வசதி கேட்டு மறியல்

குடிநீர், அடிப்படை வசதி கேட்டு மறியல்

குடிநீர், அடிப்படை வசதி கேட்டு மறியல்


ADDED : மார் 06, 2026 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 07:30 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி, பொதுமக்கள் மறியல் -போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டு சின்ன ஏரி பகுதியில், 200க்கும் மேற்பட்டோர், 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றனர். இங்கு, குடிநீர் மற்றும் சாலை வசதி வேண்டி பலவேறு முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதனால், 3வது வார்டுக்கு உட்பட்ட வன்னியர் தெருவை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், பாப்பாரப்பட்டி - பாலக்கோடு சாலையில், தமிழக வெற்றி கழக கட்சி தொண்-டர்கள் ஆதரவுடன், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், பாப்பாரப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, முறையான குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us