ADDED : ஆக 01, 2026 04:54 AM
அ நிறம் | அளவு
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகம் எதிரில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சாது, சுஜித்ரா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், அரூர் தாலுகா செல்லம்பட்டி பஞ்.,ல் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வரும், ஆதிதிராவிட இன மக்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். செல்லம்பட்டிக்கு காலை, 8:00 மணிக்கு அரசு பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்-பினர். நிர்வாகிகள் ஜெயகாந்தன், வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
