/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சம்பள மாற்றம் வழங்க கோரி தர்ணா போராட்டம்
/
சம்பள மாற்றம் வழங்க கோரி தர்ணா போராட்டம்
ADDED : நவ 28, 2024 12:56 AM
சம்பள மாற்றம் வழங்க கோரி
தர்ணா போராட்டம்
தர்மபுரி, நவ. 28-
சம்பள மாற்றம் வழங்ககோரி, பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம், ஓய்வூதியர் மற்றும்
ஒப்பந்த ஊழியர்கள் சார்பில், தர்மபுரி பொது
மேலாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.
இதில், பி.எஸ்.என்.எல்.இ.யூ., மாவட்ட செயலாளர் பரிதிவேல் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் உமாராணி உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு, 3வது சம்பள மாற்றம், பென்ஷன் மாற்றம், 2017 ஜன., 1 முதல், 15 சதவிகித உயர்வுடன் அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல்.,லில், 4 ஜி மற்றும், 5 ஜி சேவைகளின் பணிகளை விரைவுபடுத்தி, சிறந்த சேவை வழங்க வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், 26,000 வழங்க வேண்டும். 2 வது விருப்ப ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தினர்.