/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொலைத்தொடர்பு வசதி வேண்டி மறியல்
/
தொலைத்தொடர்பு வசதி வேண்டி மறியல்
ADDED : ஜன 21, 2025 06:17 AM
.பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம், தொன்னகுட்ட அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாளப்பள்ளம், புதுக்காடு, ஊர்நத்தம், சீலநாய்கனுார், பாய்பள்ளம், மேட்டூரான் கொட்டாய், அத்திம-ரத்துார் உள்ளிட்ட, பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆயிரத்-திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்ப-குதி அடர்ந்த காடு, மலைகளுக்கு இடையே உள்ளதால், தொலைத்தொடர்பு வசதி முற்றிலும் இல்லை. இதனால், அவசரத்-துக்கு கூட ஏரியூர்,
பென்னாகரம் நோக்கி செல்ல வேண்டியுள்-ளது. போன் பேச வேண்டுமெனில் உயர்ந்த மலைகள், பாறைகள், குன்றுகள் மீது ஏற வேண்டிய நிலை உள்ளது. தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி தரக்கோரி கலெக்டர், எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளிட்டவர்களிடம் மனு கொடுத்தும் எவ்-வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கோரி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள்
பென்னாகரத்தில் இருந்து முதுகம்-பட்டி வழியாக ஏரியூர் செல்லும் சாலையில் ஊர்நத்தம் எனுமி-டத்தில் மறியலில் ஈடுபட்டனர். ஏரியூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சமரச பேச்சு-வார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்க, மேல் அதிகா-ரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அப்பகுதியில், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.

