/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
துாய்மை பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
துாய்மை பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
துாய்மை பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
துாய்மை பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மே 31, 2025 06:50 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., பள்ளி கல்வி துாய்மை பணியாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சுப்பு தலைமை வகித்தார். நிர்வாகிகள் பூபதி, சுசீலா, தீபா அரசு, சதீஸ்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொதுச் செயலாளர் மணி, பள்ளி கல்வி துாய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தர்மபுரி மாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி கல்வி துாய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்தபடி ஊதியம் வழங்க வேண்டும். அடையாள அட்டை, சீருடையுடன் உபகரணங்கள் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.பள்ளி கல்வி துாய்மை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ஆஷா பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மேனகா, கட்டுமான சங்க பெண்கள் அமைப்பு மாவட்ட செயலாளர் முனியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.