/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நீர்பாசன திட்டத்தை வலியுறுத்தி போராட்டம் தண்ணீர் உரிமை கோரிக்கை மாநாட்டில் அறிவிப்பு
/
நீர்பாசன திட்டத்தை வலியுறுத்தி போராட்டம் தண்ணீர் உரிமை கோரிக்கை மாநாட்டில் அறிவிப்பு
நீர்பாசன திட்டத்தை வலியுறுத்தி போராட்டம் தண்ணீர் உரிமை கோரிக்கை மாநாட்டில் அறிவிப்பு
நீர்பாசன திட்டத்தை வலியுறுத்தி போராட்டம் தண்ணீர் உரிமை கோரிக்கை மாநாட்டில் அறிவிப்பு
ADDED : நவ 04, 2024 04:28 AM
தர்மபுரி: தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தர்மபுரி மாவட்ட விவசா-யிகள் சங்கம் சார்பில், தண்ணீர் உரிமை கோரிக்கை மாநாடு தர்ம-புரியில் நேற்று நடந்தது. மாநில பொருளாளர் பாண்டியன் தலைமை வகித்தார். இதில், தர்மபுரி மாவட்டத்தில், உபரிநீர் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து விவசாயிகளின் நலன் காக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது: எண்ணெகொள்புதுார் தடுப்பனையிலிருந்து, தும்பலஹள்ளி அணைக்கு கால்வாய் திட்டம், ஆழியாளம் முதல் துாள்செட்டி ஏரி கால்வாய் திட்டம், புலிக்கரை ஏரி தண்ணீர் கொண்டு வரும் திட்டம் உள்ளிட்ட-வற்றை செயல்படுத்துவதில், இந்த அரசு ஆமை வேகத்தில் உள்-ளது. ஒகேனக்கல் காவிரியாற்றில் உபரி நீரை, நீரேற்று திட்-டத்தின் மூலம், தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்ப, அரசியல் கட்-சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், விவசாயிகளுக்கு அரசு ஏமாற்றத்தையே அளிக்கி-றது.
அரசு விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்று அறிவித்தாலும், நிதி ஒதுக்குவதில்லை. விவசாயிகளின் நிலை குறித்து, அரசு கவனத்-திற்கு கொண்டு செல்ல, முதல் கட்டமாக தர்மபுரி மாவட்ட விவ-சாயிகளை திரட்டி, தண்ணீர் உரிமை கோரிக்கை மாநாடு நடத்தி உள்ளோம். கோரிக்கைகளுக்கு, அரசு செவிசாய்க்கா விட்டால், விரைவில் அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு, விவசாயிகள் சார்பில், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். தர்மபுரி மாவட்டத்தில், உபரிநீர் சார்ந்த திட்டங்க-ளுக்கு யார் போராட்டம் நடத்தினாலும் அதை நாங்கள் ஆத-ரிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.