/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தெருவிளக்கு அமைக்காததை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முன் தர்ணா
/
தெருவிளக்கு அமைக்காததை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முன் தர்ணா
தெருவிளக்கு அமைக்காததை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முன் தர்ணா
தெருவிளக்கு அமைக்காததை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முன் தர்ணா
ADDED : ஜன 29, 2025 07:08 AM
நல்லம்பள்ளி: தெருவிளக்கு அமைக்க, நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து, அதியமான்கோட்டை துணை மின்நிலையம் முன், பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட எர்ரபட்டி, தொழில் மையம், தேங்காமரத்துபட்டி, ஒட்டப்பட்டி உட்பட்ட, 154 இடங்களில், 27 புதிய மின்கம்பங்களுடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்க, பஞ்., நிர்வாகம் சார்பில் கடந்த, 4 மாதங்களுக்கு முன், மின்வாரியத்திற்கு, 7.60 லட்சம் ரூபாய் செலுத்தினர்.
இந்நிலையில், ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., உட்பட்ட பகுதிகளில், புதிய மின்கம்பங்களுடன் கூடிய தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்காமல், மின்வாரியத்தினர் தாமதப்படுத்தினர். இதனால் இரவு நேரத்தில் தெருக்களில் இருட்டை பயன்படுத்தி, திருட்டு சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதால், தெருவிளக்கு அமைக்கக்கோரி, மின்வாரியத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., மக்கள், அதியமான்கோட்டை துணை மின்நிலைய அலுவலக வளாகத்தில், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், மின்வாரிய உதவி பொறியாளர் பாலமுரளி மற்றும் அதியமான்கோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.

