தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/டாஸ்மாக் கடை அகற்றக்கோரி போராட்டம்

டாஸ்மாக் கடை அகற்றக்கோரி போராட்டம்

டாஸ்மாக் கடை அகற்றக்கோரி போராட்டம்


ADDED : ஜூன் 09, 2026 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி ஊராட்-சியில், துறிஞ்சிப்பட்டி, வடசந்தையூர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் வட சந்தையூரில், 1,000க்கும் மேற்பட்ட குடியி-ருப்புகள், பள்ளிவாசல், சந்தை வளாகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பகு-தியில் கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இக்கடை வழி-யாக சென்று வரும் மாணவ, மாணவியர், பெண்கள், போதை ஆசாமிகளால் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.

இதனால், இக்கடையை அகற்றக்கோரி, கடந்த ஓராண்டுக்கு மேல் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் நட-வடிக்கை இல்லை. தற்போது, த.வெ.க., அரசு உத்தரவின்படி, தமிழகம் முழுவதும், 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகிறது. இதில் இக்கடையையும் சேர்த்து மூடக்கோரி, கடந்த, 15 நாட்களுக்கு முன், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு அளித்-தனர்.நடவடிக்கை இல்லாததால் நேற்று காலை, 11:00 மணியளவில், 500க்கும் மேற்பட்டோர், வடசந்-தையூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்-கோரி, கடையை முற்றுகையிட்டு, 3 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், அரூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார், தர்மபுரி டாஸ்மாக் துணை மேலாளர் கண்ணன், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் பார்வதி, இன்ஸ்பெக்டர் கார்த்திகே-யனி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு மாதத்திற்குள் கடையை அகற்றுவதாக உறு-தியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us