பொது வழிப்பாதை பிரச்னைக்கு தீர்வு கோரி சடலத்துடன் மறியல்
பொது வழிப்பாதை பிரச்னைக்கு தீர்வு கோரி சடலத்துடன் மறியல்
ADDED : செப் 21, 2026 02:13 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகு-தியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த, 2017ம் ஆண்டு, 3 சென்ட் நிலம் இலவச வீட்டுமனை பட்டாவாக வழங்கப்பட்டுள்-ளது. இந்த நிலம், மயானத்திற்கு செல்லும் பொதுவழிப்பா-தையில் இருப்பதாகவும், இதனால் சடலங்களை மயானத்திற்கு எடுத்துச் செல்வதில் தொடர்ந்து பிரச்னை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், பொதுவழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், டி.அம்மா-பேட்டையை சேர்ந்த, வேடியப்பன், 75, என்பவர் நேற்று முன்-தினம் உயிரிந்தார். பொதுவழிப்பாதை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, அவரது உடலை அடக்கம் செய்ய மாட்டோம் எனக்கூறி அவரது உறவினர்களும், பொதுமக்களும் டி.ஆண்-டியூர் - நீப்பத்துறை சாலையில், நேற்று காலை, 11:30 மணிக்கு சடலத்தை வைத்து, சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்க-ளிடம் அரூர் தாசில்தார் வள்ளி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், மயானத்திற்கு சடலத்தை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்-வதாகவும், ஒரு சில நாட்களில் பொதுவழிப்பாதையை நில அள-வீடு செய்து, பாதை ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இதைய-டுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் மாலை, 5:30 மணிக்கு கலைந்து சென்றனர்.
