/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
ADDED : மார் 10, 2026 07:23 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், தனியார் பங்களிப்புடன் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு உதவி உபகரணங்களை, சி.இ.ஓ., ஜோதிசந்திரா நேற்று வழங்கினார்.
தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், சமூக பங்களிப்பு நிதி மூலம், அரசு பள்ளிகளில் படிக்கும், 60 மாணவர்களுக்கு, 3 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள் தனியார் பங்களிப்புடன் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
சி.இ.ஓ., ஜோதிசந்திரா தலைமை வகித்து, தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளி ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கினார். இதில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

