/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் உதவித்தொகை வழங்கல்
/
மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் உதவித்தொகை வழங்கல்
மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் உதவித்தொகை வழங்கல்
மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் உதவித்தொகை வழங்கல்
ADDED : மார் 05, 2025 08:10 AM

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கேத்துரெட்டிப்பட்டியில் லட்சுமியம்மாள்-- நஞ்சப்பகவுண்டர் நினைவு அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் விழா, தொழிலதிபர் கவுதமன் தலைமையில் நடந்தது.
தொழிலதிபர் ரவிச்சந்திரன், முதன்மை பொறியாளர் தியாகராஜன், ஊராட்சி உதவி இயக்குனர் வடிவேலன், பேராசிரியர் இளங்கோவன், அதியமான் கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமால் முருகன், டி.எம்.பி., வங்கி முதுநிலை மேலாளர் கார்த்திக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அறக்கட்டளை தலைவர், ரயில்வே ஒப்பந்ததாரர் பரமசிவம், சிவசங்கரி வரவேற்றனர்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கேத்துரெட்டிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியிலும், கடந்தாண்டு உயர் நிலைப் பள்ளியில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
பாடங்களில், 100க்கு 100 எடுத்தவர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மணி, சுதா, நடராஜன் ஆகியோருக்கும் தலா, 4 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், 3 தொண்டு நிறுவனங்களுக்கு தலா, 50,000 ரூபாய் என மொத்தம், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவித்தொகையை அறக்கட்டளை நிறுவனரும், ரயில்வே ஒப்பந்ததாரருமான பரமசிவம், -சிவசங்கரி ஆகியோர் வழங்கினர். உதவி தலைமை ஆசிரியர் மணி, ஆசிரியர்கள் ராஜா இளங்கோ முருகன் சுந்தரம், சங்கர் சந்திரசேகர் முன்னாள் கவுன்சிலர் கோவிந்தசாமி கால்நடை மருத்துவர் சக்திவேல், டாக்டர் தம்பிதுரை, உட்பட கலந்து கொண்டனர். ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.