/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விளையாட்டு உபகரணங்கள் கிராம பஞ்.,களுக்கு வழங்கல்
/
விளையாட்டு உபகரணங்கள் கிராம பஞ்.,களுக்கு வழங்கல்
ADDED : டிச 08, 2024 01:38 AM
விளையாட்டு உபகரணங்கள்
கிராம பஞ்.,களுக்கு வழங்கல்
தர்மபுரி, டிச. 8-
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கலையரங்கில், கிராம பஞ்.,களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில், அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில், பெஞ்சல் புயலால் பாதித்த, 98 பேருக்கு விளையாட்டு உபகரணங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், 10 பேருக்கு, 63.00 லட்சம் ரூபாய் சிறு வணிக கடன், வருவாய்த்துறை சார்பில், 52 பயனாளிகளுக்கு, 25 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம், 160 பயனாளிகளுக்கு, 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.