ADDED : செப் 22, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில், அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
தி.மு.க., சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் ரியாஸ் தலைமை வகித்தார். நவீத் வரவேற்றார். கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., ஏழை, எளிய மக்களுக்கு, தையல் இயந்திரம், சேலை, ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, ஹாட்பாக்ஸ் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பிரியாணி விருந்தையும் தொடங்கி வைத்தார். இதில், நகர பொறுப்பாளர் அஸ்லாம், கவுன்சிலர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.