/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பஸ்கள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை
/
அரசு பஸ்கள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை
ADDED : நவ 04, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் - ஊத்தங்கரை சாலையில், எச்.ஈச்சம்பாடி உள்ளது. இதைச் சுற்றியுள்ள கீழ்மொரப்பூர், வேப்பநத்தம், கணபதி-பட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாண-வர்கள் தினமும் எச்.ஈச்சம்பாடி பஸ் ஸ்டாப்பிற்கு வந்து அங்கி-ருந்து அரூர், சேலம், ஊத்தங்கரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ஈச்சம்பாடியில் அரசு பஸ்கள் நின்று செல்லாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்-றனர். எனவே, எச்.ஈச்சம்பாடியில் அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்துதுறை நடவடிக்கை எடுக்க, அப்ப-குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.