/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலம் கட்ட வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
/
பாலம் கட்ட வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 07, 2024 07:29 AM
தர்மபுரி: பாலம் கட்ட வலியுறுத்தி, ஒட்டப்பட்டி ஏரி உபரிநீர் செல்லும் தண்ணீரில் நின்று, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி அடுத்த, ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்.,க்குட்பட்ட குப்பன்-கொட்டாயில், 20 -வீடுகளில், 80-க்கும் மேற்பட்டோர் வசித்து வரு-கின்றனர். இதில், அப்பகுதிக்கு செல்ல ஒட்டப்பட்டி ஏரியின் நீரோடை வழியை பயன்-படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால், ஒட்டப்பட்டி ஏரி நிரம்பி, உபரிநீர் மதகு வழியாக, கடந்த ஒரு வாரமாக வெளியேறி வருகிறது.
இந்த வழி பாதையில், பாலம் இல்லாததால், இவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்
தவித்து வருகின்றனர். இதில், தற்காலிக பாலம் அமைக்ககோரி, பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை
அதிகா-ரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்ப-குதி மக்கள், ஒட்டப்பட்டி ஏரி உபரிநீர் செல்லும்
தண்ணீரில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.