ADDED : ஜன 22, 2026 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த பருவதனஅள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று, நடந்தது. இதில், 51.96 லட்சத்தில் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. தர்மபுரி கலெக்டர் சதீஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து, வருவாய் துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, ஈமச்சடங்கு உதவித்தொகை, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தையல்
இயந்திரம், தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் துறை சார்பில் மண் புழு உரபடுகை என மொத்தம், 191 பயனாளர்களுக்கு, 51 லட்-சத்து, 96,327 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உத-விகளை வழங்கினார்.

