/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு டவுன் பஸ்சுக்கு பொதுமக்கள் வரவேற்பு
/
அரசு டவுன் பஸ்சுக்கு பொதுமக்கள் வரவேற்பு
ADDED : ஜன 29, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மிட்டாதின்னஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட விஜய் நகருக்கு வழிதட நீட்டிப்பு மூலம், அரசு டவுன் பஸ் இயக்கத்தை வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, நேற்று முதல்முறையாக விஜய் நகர் வந்த அரசு டவுன் பஸ்சுக்கு, அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதில், முன்னாள் கவுன்சிலர் சசிகுமார், தொ.மு.ச., நிர்வாகி கஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

