/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை
/
ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை
ADDED : ஜூலை 27, 2024 12:26 AM
தர்மபுரி: ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தர்மபுரி வெளிப்பேட்டை தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் உள்ள மூலவருக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபி ேஷகம் நடந்தது.
பின், மூலவருக்கு எலுமிச்சை, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், மாம்பழம், திராட்சை உள்ளிட்ட பல்வேறு பழங்கள் கொண்டு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.* கடகத்துார் பட்டாளம்மன், கொளகத்துார் பச்சையம்மன், பாரதிபுரம் சாலை மாரியம்மன் கோவில், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன், எஸ்.வி.,ரோடு அங்காளம்மன், நெசவாளர்காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் அலங்காரங்கள் நடந்தன.உள்ளூர் விடுமுறைமாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் ஆக., 3 அன்று ஆடிப் பெருக்கு பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாளில், பள்ளிகள், டியூசன் சென்டர்கள், அரசு பணியாளர்கள் யாரும் பணியில் ஈடுபட மாட்டார்கள். எனவே, அரசு அலுவலகங்களில் ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால், பொதுமக்கள் முன் கூட்டியே அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.