/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு
/
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு
ADDED : ஜூன் 10, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, கல்லாவியில் சுத்திக்கரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. கல்லாவி பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நிறைவடைந்தது. ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதில், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, ஒன்றிய செயலாளர்கள் வேங்கன், வேடி, நகர செயலாளர் ஆறுமுகம், முன்னாள் பஞ்., தலைவர் ராமன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.