/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தள்ளு வண்டி வியாபாரிகள் சங்க கிளை நிர்வாகிகள் கூட்டம்
/
தள்ளு வண்டி வியாபாரிகள் சங்க கிளை நிர்வாகிகள் கூட்டம்
தள்ளு வண்டி வியாபாரிகள் சங்க கிளை நிர்வாகிகள் கூட்டம்
தள்ளு வண்டி வியாபாரிகள் சங்க கிளை நிர்வாகிகள் கூட்டம்
ADDED : டிச 13, 2024 01:16 AM
தர்மபுரி, டிச. 13-
தர்மபுரியில், தமிழ்மாநில சிறுகடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவர் வீரமணி, பொதுச்செயலாளர் கிருஷ்ணன், பேரவை செயலாளர் அலாவுதீன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், கிளை கவுரவ தலைவராக ஜெயபால், கிளை தலைவராக சங்கர், தலைமை செயலாளராக ரவிக்குமார், பொருளாளராக சர்தார், துணைத்தலைவராக மணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்ப்ட்டனர்.
இதில், அனைத்து தள்ளுவண்டி மற்றும் சிறுகடை வியாபாரிகளுக்கு, தேசிய வாழ்வாதார இயக்கத்தின் அடையாள அட்டை பெற்று தர வேண்டும். சிறு வியாபாரிகளுக்கு வங்கி கடன் ஏற்பாடு செய்து தர வேண்டும். உறுப்பினர்களுக்கு, இன்சூரன்ஸ் பாலிசி செய்ய வேண்டும். தொழிலாளார் நலவாரியத்தில் பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் தமிழகன் நன்றி கூறினார்.

