/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புதுார் மாரியம்மன் கோவில் திருவிழா பந்தகால் நடல்
/
புதுார் மாரியம்மன் கோவில் திருவிழா பந்தகால் நடல்
ADDED : ஜன 27, 2025 02:43 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டிலுள்ள புதுார் மாரியம்மன் கோவில் திருவிழாவை, 12 கிராம மக்கள் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
இதில், உள்ளூர், வெளியூர், மற்றும் வெளி மாநி-லத்தை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர். திருவிழாவில், திரவுபதி அம்மன் கோவில் வளா-கத்தில் இருந்து புதுார் மாரியம்மன் கோவில் வரை, 3 கி.மீ., பால்குட ஊர்வலம், தீச்சட்டி, அலகு குத்துதல், சுவாமி வேடம் அணிந்து செல்லுதல், வாகனங்களை இழுத்தல் போன்ற வேண்டு-தல்களை பக்தர்கள் நிறைவேற்றுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பவுர்ணமி நாளில் திருவிழா நடக்கும். அதன்படி, இந்தாண்டு திருவிழா வரும் பிப்., 10 முதல் பிப்., 14 வரை, 5 நாட்கள் நடக்கவுள்ளது.திருவிழாவை முன்னிட்டு, பந்தகால் நடும் நிகழ்ச்சி, திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் தர்மகர்த்தா இளங்கோ தலை-மையில் நேற்று நடந்தது. பந்தகால் கொம்பிற்கு மா, இலை, தோரணம் கட்டி, மஞ்சள் குங்குமம் வைத்து, தீர்த்தமிட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டு பந்தகால் நடப்பட்டது. இதில், பாலக்கோடு பேரூராட்சி சேர்மன் முரளி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் கிருஷ்ணன்,
ரங்கநாதன், புதுார் மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் சங்கர்,
உட்பட ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.