புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் பராமரிப்பால் இன்று மூடல்
புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் பராமரிப்பால் இன்று மூடல்
ADDED : ஜூலை 07, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; தர்மபுரி மாவட்டம், கடத்துார் - அரூர் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட்டில், இரு ரயில் பாதைகளுக்கும் இடையே கான்கிரீட் தரைத்தளம் சீராக இல்-லாமல் மேடும், பள்ளமுமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வரு-கின்றனர்.
இதனால் அவசர வேலை காரணமாக ரயில்வே கேட் பகுதியில், பராமரிப்பு செய்ய அதி-காரிகளுக்கு ரயில்வே உயரதிகாரிகள் உத்தர-விட்டனர். இதையடுத்து ரயில்வே கேட் இன்று, 7ம் தேதி மதியம், 12:00 முதல் மாலை, 4:00 மணி வரை மூடப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரி-வித்துள்ளது. இது குறித்து எச்சரிக்கை பலகை, ரயில்வே கேட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வ-ழியாக வரும் வாகனங்கள், பொதுமக்கள், வேறு சாலையில் செல்ல, ரயில்வே ஊழியர்கள் அறி-வுறுத்தினர்.
