/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆர்.கோபிநாதம்பட்டி அரசு பள்ளி சாதனை
/
ஆர்.கோபிநாதம்பட்டி அரசு பள்ளி சாதனை
ADDED : டிச 07, 2024 07:29 AM
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 2024-25ம் கல்வியாண்டில், சரகம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான குழு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகளில், 170க்கும் மேற்-பட்டோர் கலந்து கொண்டனர்.
அதில், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கபடி, கோ-கோ, ஸ்குவாஷ், தடகளம் மற்றும் யோகா போட்டிகளில், மாவட்ட
அளவில் முதலிடம், இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்-தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும்
அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் ஆகியோரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
ஜோதிசந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் மகாத்மா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்-துகுமார், பள்ளி தலைமை
ஆசிரியர் செல்வம் மற்றும் ஆசிரி-யர்கள் பாராட்டினர்.