/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தண்டவாளங்களில் அத்துமீறல் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு
/
தண்டவாளங்களில் அத்துமீறல் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு
தண்டவாளங்களில் அத்துமீறல் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு
தண்டவாளங்களில் அத்துமீறல் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 09, 2025 02:13 AM
தர்மபுரி, தர்மபுரி ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் சந்தோஷ் கவுன்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில், ரயில்வே பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரயில்வே போலீசார் மற்றும் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தினர் இணைந்து, பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தி வருகிறோம்.
இதில், ரயில் தண்டவாளங்களில் அத்துமீறுவது, கால்நடைகளை தண்டவாளங்களுக்கு அருகில் மேய்ச்சலுக்கு அனுமதித்தல், குழந்தைகளை ரயில் தண்டவாளங்களின் அருகில் விளையாட அனுமதிப்பது, ரயில்கள் மீது கற்களை எறிவது, தற்கொலைக்கு முயற்சித்தல், கால்வாய்களில் அமர்ந்திருப்பது போன்றவை பாதுகாப்பற்றது.
இதுபோன்ற குற்றங்களுக்கு, ரயில்வே சட்டத்தில், எடுக்கப்படும் சட்டரீதியான நடவடிக்கை குறித்து, பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எனவே, பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில், ஈடுபடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.