/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரயிலில் பயணி தவற விட்ட நகைகளை மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீசார்
/
ரயிலில் பயணி தவற விட்ட நகைகளை மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீசார்
ரயிலில் பயணி தவற விட்ட நகைகளை மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீசார்
ரயிலில் பயணி தவற விட்ட நகைகளை மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீசார்
ADDED : டிச 03, 2025 08:15 AM

தர்மபுரி: சேலத்தில், பெண் பயணி ரயிலில் தவறவிட்ட நகைகளை, ரயில்வே போலீசார் மீட்டு, அப்பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம், மாரமங்கலத்துபட்டியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் திருமாறன், 63. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 57. இவர்கள், திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு, சேலம் வழியாக பெங்களுரு செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில், 'பி-3' பெட்டியில், சேலம் நோக்கி பயணித்தனர்.
நேற்று அதிகாலை, 4:20 மணிக்கு சேலம் ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது, தமிழ்ச்செல்வி தன் ஹேண்ட் பேக்கை, பயணம் செய்த ரயில் பெட்டியில் மறந்து வைத்து விட்டு இறங்கி விட்டார். அதில், 6 பவுன் வளையல், 2 பவுன் செயின், 3,000 ரூபாய், ஒரு மொபைல் போன் இருந்துள்ளது. இது குறித்து தமிழ்ச்செல்வி, சேலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தார்.
சேலம் ரயில்வே டி.எஸ்.பி., லட்சுமணன் அறிவுறுத்தலின் படி, எக்ஸ்பிரஸ் ரயிலில் ரோந்து பணியில் இருந்த, ரயில்வே போலீஸ் ஜெய்பிரகாசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நகைகளுடன் ஹேண்ட் பேக் மீட்கப்பட்டு, தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் எஸ்.ஐ., ரமேஷிடம் நேற்று காலை, 5:30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. தர்மபுரி ரயில்வே போலீசார், தமிழ்ச்செல்வியை தர்மபுரிக்கு வரவழைத்து, நேற்று காலை, 9:00 மணிக்கு நகை மற்றும் பணம் இருந்த ஹேண்ட் பேக்கை அவரிடம் ஒப்படைத்தனர்.

