தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூர் பகுதியில் மழை: வயல்களில் தேங்கிய நீர்

அரூர் பகுதியில் மழை: வயல்களில் தேங்கிய நீர்

அரூர் பகுதியில் மழை: வயல்களில் தேங்கிய நீர்


ADDED : நவ 30, 2025 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 02:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயலால், நேற்று அதிகாலை முதல், தர்மபுரி மாவட்டம், அரூர், தீர்த்தமலை, மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அரூரில், திரு.வி.க., நகர், நான்குரோடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியது. அதே போல் தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியது.

கல்லுாரிக்கு சென்ற மாணவர்கள், கூலி வேலைக்கு சென்ற

வர்கள் மழையால் சிரமப்பட்டனர். கடை வீதியில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இருசக்கர வாகனங்

களில் செல்வோர், ரெயின்கோட் அணிந்தபடி சென்றனர். சாலையோர கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் விட முடியாமல் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகினர். சாரல் மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us