ADDED : ஜூன் 19, 2026 05:02 AM

அ நிறம் | அளவு
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்-டாரத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 7:30 மணி வரை, விட்டு விட்டு பர-வலாக சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்தது.
இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியது. மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. நேற்று முன்தினம் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
