தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்

மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்

மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்


ADDED : ஜூலை 14, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்; அரூர்-சேலம் பைபாஸ் சாலையில், கச்சேரி-மேட்டில் இருந்து, நடேசா பெட்ரோல் பங்க் வரை, 2 கி.மீ., துாரத்திற்கு, 7 ஆண்டுகளுக்கு முன், நான்குவழிச்சாலை விரி-வாக்க பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மழைநீர் வடிகால் வசதி முறையாக அமைக்கப்ப-டவில்லை.

இதனால் சிறிதளவு மழை பெய்தால் கூட, என்.என்.மஹால், நான்குரோடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட சாலையின் பல இடங்களில், மழைநீர் தேங்குகிறது. அப்போது, சாலையில் அதிவேகத்துடன் செல்லும் கார், லாரி, பஸ் உள்-ளிட்ட வாகனங்கள், தேங்கி நிற்கும் நீரை, சிதற-டிக்கச் செய்கிறது. சாலையோரத்தில் பஸ்சுக்கு காத்திருப்பவர்க்ள மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு பருவமழையின் போதும், இத்தகைய பிரச்னை தொடர்ந்தாலும், சாலையோரத்தில் மழைநீர் வடிகால் அமைக்க துறை ரீதியான அதி-காரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, சாலையில், மழைநீர் தேங்கும் இடங்-களைக் கண்டறிந்து, வடிகால் ஏற்படுத்தி மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், என, பொதுமக்களும், வாகன ஓட்டி-களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us