தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கழிவு நீருடன் மழை நீர் கலப்பு வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

கழிவு நீருடன் மழை நீர் கலப்பு வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

கழிவு நீருடன் மழை நீர் கலப்பு வாகன ஓட்டிகள், மக்கள் அவதி


ADDED : ஜூன் 15, 2026 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், இரண்டு கடந்த, 4 நாட்க-ளாக ஆங்காங்கே, மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு, 7:15 மணி முதல் தர்மபுரி, பாலக்கோடு, இண்டூர், நல்லம்பள்ளி, ஒட்டப்பட்டி, தொப்பூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரை மணி-நேரம் பரவலாக கனமழை பெய்தது. தர்மபுரி நக-ரிலுள்ள சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் ஆறு போல் ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்கி சென்றதுடன் கடும் அவதியடைந்தனர். கனம-ழையின் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

* தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றுவட்டா-ரத்தில், நேற்றிரவு, 7:00 மணி முதல், சூறைக்காற்-றுடன் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. சூறைக்காற்றால் மின்தடை ஏற்பட்டதுடன், வணிக நிறுவனங்களின் விளம்பர பலகைகள் மற்றும் அரசியல் கட்சியினர், தனியார் நிறுவ-னங்களின் பேனர்கள் துாக்கி வீசப்பட்டன. நேற்று பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us