ADDED : மார் 22, 2026 06:59 AM
தர்மபுரி:தர்மபுரி
மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில்,
ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கொண்டாடினர்.
தர்மபுரி
நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் சார்பில், தர்மபுரி --
கிருஷ்ணகிரி சாலை-யிலுள்ள ஈத்கா மைதானத்தில், மாவட்ட தலைமை ஹாஜி கலந்து
கொண்ட ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. பின் ஒருவருக்கு ஒருவர்
கட்டித்தழுவி வாழ்த்தை பரிமாறிக் கொண்டனர். இதற்-கான ஏற்பாடுகளை
மாவட்ட முத்தவல்லிகள் சங்கத்தினர் மற்றும் நகர அனைத்து மசூதிகளின்
கூட்டமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நகர பகுதியை
ஒட்டிய டேகிஸ்பேட்டை, கீழ் மசூதி தெரு, முகமது அலி கிளப் ரோடு,
மதிகோன்பாளையம், வி.ஜெட்டி-ஹள்ளி, வட்டார வளர்ச்சி காலனி, அண்ணா நகர்,
ஆகிய இடங்-களில் உள்ள மசூதிகள் மற்றும் தர்மபுரி நகரை சுற்றியுள்ள
அனைத்து மசூதி
களிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.
அதே போல், மாவட்டத்தில் நல்லம்பள்ளி, தொப்பூர், பாலக்கோடு,
பென்னாகரம், காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, ஏரியூர், கடத்துார்,
பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், கம்பை-நல்லுார்,
மாரண்டஹள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் நடந்த, ரம்ஜான் பண்டிகை சிறப்புதொழுகையில் பலர் கலந்து கொண்டனர்.
