/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
/
பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ADDED : அக் 27, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 27---
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூதநத்தம் -கள்ளியூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான, ஒரு ஏக்கர் காலி இடம், தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சண்முகம் உத்தரவின்படி, உதவி பொறியாளர் நரசிம்மன் தலைமை
யில் பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் நில அளவீடு செய்தனர். பின் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை சமன் செய்து மீட்டனர். பின் அளவு கற்கள் நடப்பட்டு, நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டது.