/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு மகளிர் பள்ளி மாணவியர் தடகள போட்டியில் சாதனை
/
அரசு மகளிர் பள்ளி மாணவியர் தடகள போட்டியில் சாதனை
ADDED : அக் 29, 2024 01:21 AM
அரசு மகளிர் பள்ளி மாணவியர்
தடகள போட்டியில் சாதனை
தர்மபுரி, அக். 29-
மாவட்ட அளவிலான தடகள போட்டியில், அதியமான்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், தனிநபர் மற்றும் ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
தர்மபுரி மாவட்ட விளையாட்டரங்கில், அக்., 23, 24 ல் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இதில், அதியமான்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், 100, 200, 400, 800 மீட்டர் ஓட்ட போட்டியில் முதல், 3 இடங்களை பெற்றனர். இதில் ஒட்டுமொத்தமாக, 53 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனர். இதில், தேக்வாண்டோ, சிலம்பம் உட்பட அனைத்து போட்களில் வெற்றிபெற்ற மாணவியர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவியர் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கீதா மற்றும் மாது ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.