/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொங்கலையொட்டி செங்கரும்பு விற்பனை ஜோர்
/
பொங்கலையொட்டி செங்கரும்பு விற்பனை ஜோர்
ADDED : ஜன 16, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டியில், பொங்கல் பண்டிகையையொட்டி செங்கரும்பு விற்பனை மும்முரமாக நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி, கடத்துாரிலுள்ள கடைவீதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கரும்பு விற்பனை மும்முரமாக நடக்கிறது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'விவசாயிகளிடம் மொத்தமாக விலை பேசி தேவைக்கேற்ப வெட்டி கொண்டு வருகிறோம். சில்லரையில் தற்போது துண்டுகளாக, 20, 50, 100 ரூபாய் என தரம் பிரித்து விற்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை, பொங்கலுக்கு ஒரு சில மாதங்கள் முன்பே, சில்லரை விற்பனை துவங்கி விடும். தற்போது குக்கிராம மக்களை நம்பி மட்டும், கடை அமைத்து விற்கிறோம்' என்றனர்.

