/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொலை வழக்கில் மத போதகருக்கு 14 ஆண்டு சிறை
/
கொலை வழக்கில் மத போதகருக்கு 14 ஆண்டு சிறை
ADDED : மார் 29, 2025 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி : கொலை வழக்கில் கைதான மத போதகருக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், வர்ணதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த அற்புதராஜ், 43, அரூர் சர்ச் மத போதகராக பணிபுரிந்தார். இவருக்கும், அரூர் சந்தைமேடு கண்ணகி, 50, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 2014 செப்., 4ல் கண்ணகி வீட்டிற்கு சென்ற அற்புதராஜ், அவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது, அற்புதராஜ் கண்ணகியை அடித்து, முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தார்.
தர்மபுரி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில், அற்புதராஜூக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சிவஞானம் நேற்று தீர்ப்பளித்தார்.