/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஜன 29, 2025 07:11 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் உள்ளது குந்தாரப்பள்ளி கூட்ரோடு பகுதி. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சந்தை நடப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, குந்தாரப்பள்ளி பிரிவு சாலை முதல், சந்தை நடக்கும் இடம் வரை இருபுறமும் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இக்கடைகள் வைத்திருப்பவர்கள் சிலர், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தையும் ஆக்கிரமித்து விளம்பர பலகைகள், கூரை அமைப்பது போன்றவற்றால் அதிகளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறையினருக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து நேற்று, குருபரப்பள்ளி போலீசார் பாதுகாப்புடன், நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் அன்புஎழில் தலைமையில், பொக்லைன் மூலம் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோரம் ஆக்கிரமிப்பதை கடைக்காரர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.

