/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஜூலை 21, 2024 09:28 AM
தர்மபுரி, : நல்லம்பள்ளி அருகே, தேசிய நெடுஞ்சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், சாலை பராமரிப்பு குழுவினர் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, பாளையம் சுங்கசாவடி உள்ளது. இதில், சேலம் மாவட்டம் தும்பிபாடியில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் வரை, 86 கி.மீ., வரை சாலை பராம-ரிப்பு பணியை சுங்கச்சாவடி நிறுவனம் செய்து வருகிறது. இதில், சாலை பராமரிப்பு, பாதுகாப்பு, விபத்து மீட்பு உள்ளிட்ட பணிகளை செய்து வரு-கின்றனர்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் இருபுறங்களிலும் ஓட்டல்கள், வணிக வளாகம் மற்றும் கடைகள் வைத்தி-ருப்போர் தொடர்ந்து, ஆக்கிரமிப்பு செய்து வரு-கின்றனர். இது தொடர்பாக, ஒரு சில இடங்களில் அவ்வப்போது, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வந்-தது. இருப்பினும், தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் நடக்கிறது. நல்லம்பள்ளி அடுத்த, சவுளுர் பகுதியில் கடைகள் மற்றும் ஓட்டல்கள் சாலையை ஆக்கி-ரமித்திருந்தன. நேற்று, பாளையம் சுங்கச்சாவடி ஊழியர்கள் அதை அகற்றி அப்புறப் படுத்தினர். மேலும், இதேபோல், தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில், அனைத்து ஆக்கிரமிப்புக-ளையும் அகற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.