/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கூடலுாரில் ஒட்டு கால்வாய் சீரமைப்பு பணி துவக்கம்
/
கூடலுாரில் ஒட்டு கால்வாய் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : அக் 19, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி பஞ்., கூடலுாரில் இருந்து, தீர்த்தமலை பஞ்., பொய்யப்பட்டி வரை, 1.50 கி.மீ., துாரத்திற்கு, வரட்டாற்றின் குறுக்கேயுள்ள ஒட்டு பாசன கால்வாய் சேதமடைந்துள்ளது.
இதை, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணிக்கு, நேற்று பூஜை நடந்தது. அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊர்மக்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.

