sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/குந்தியம்மன் கோவில் வளாகத்தில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை

குந்தியம்மன் கோவில் வளாகத்தில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை

குந்தியம்மன் கோவில் வளாகத்தில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை


ADDED : பிப் 12, 2024 10:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2024 10:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாலக்கோடு: பாலக்கோடு அருகே உள்ள குந்தியம்மன் கோவில் வளாகத்தில் குடிநீர், கழிவறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, புளிக்கரை பஞ்., உட்பட்ட கோவிலுாரில் மிகவும் பழமையான குந்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு திங்கள், வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை நடக்கின்றன. ஆயுதபூஜையன்று திருவிழாவும், காணும் பொங்கல் திருநாளில், கரக திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.

இச்சமயத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள், இக்கோவில் வளாக பகுதியில் இதுவரை அமைக்கப்படவில்லை. மேலும், மின்விளக்குகள் இல்லாததால், இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் கோவில் வளாகப் பகுதியில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுகின்றனர். மேலும், கோவில் அருகே உள்ள தெப்பக்குளம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதை சீரமைத்து, குளத்தில் நீர் நிரப்பி, தெப்பகுளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us