தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மயான வசதி கேட்டு கோரிக்கை

மயான வசதி கேட்டு கோரிக்கை

மயான வசதி கேட்டு கோரிக்கை


ADDED : நவ 18, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்,தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா தீர்த்தமலை பஞ்.,க்கு உட்பட்ட கட்டவடிச்சாம்பட்டியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் மயானம் இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை, அங்குள்ள வரட்டாற்றில் அடக்கம் செய்து வருகின்றனர்.

மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, சடலங்களை அடக்கம் செய்ய முடியாத நிலையுள்ளது. கட்டவடிச்சாம்பட்டியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதில், மயானத்திற்கு இடம் ஒதுக்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கட்டவடிச்சாம்பட்டியில் மயான வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us