மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 12, 2026 03:28 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்-கையில் தெரிவித்துள்ளதாவது:
மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனரகத்தின் அறிவுறுத்தலின்-படி, தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027, இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, தர்மபுரி மாவட்டத்தில் வீட்டு பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்ப-டுத்தப்பட்டு, பொதுமக்கள் தங்களது குடும்ப விபரங்களை இணைய வழியாக பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு வசதி ஏற்ப-டுத்தப்பட்டுள்ளது. https://se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய
தளத்தை வரும் ஜூலை, 17 முதல், 31ம் தேதி வரை பயன்ப-டுத்தி, தங்களது குடும்ப விபரங்களை முன்கூட்டியே எளிதாக பதிவு செய்து, ஐடி.,யை பெற்றுக் கொள்ளலாம். பின்னர், கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போது அந்த ஐடி.,யை வழங்-கினால் போதுமானது.
ஆக., 1 முதல், 30ம் தேதி வரை, தர்மபுரி மாவட்டம் முழுவதும் வீடுதோறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்கவுள்-ளன. இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அரசு வழங்கிய அடையாள அட்-டையுடன் வீடுதோறும் நேரடியாக வந்து தங்களது விபரங்களை சேகரிப்பார்கள்.
இக்கணக்கெடுப்பு பணியில், 2,376 கணக்கெடுப்பாளர்கள், 399 மேற்பார்வையாளர்கள் ஈடுபட உள்ளனர். மக்கள்தொகை கணக்-கெடுப்பு, நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்பதால், இப்பணி வெற்றிகரமாக நடக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை கட்-டணமில்லா தொலைபேசி எண், 1077, 04342 - 231077, 04342 - 231500, வாட்ஸாப் எண், 89038 91077 மற்றும் இ-மெயில் முகவரி, censusdharmapuri@gmail.com மூலம் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
