sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா வழங்க கோரிக்கை

/

அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா வழங்க கோரிக்கை

அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா வழங்க கோரிக்கை

அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா வழங்க கோரிக்கை


ADDED : ஜன 06, 2025 02:39 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த குருபரஹள்ளி கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், 92 பேருக்கு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் கடந்த, 1989ல் இல-வச வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.

அதில் பெரும்பாலானோர் வீடுகள் கட்டி வசிக்கின்றனர். ஆனால் யாருக்கும் பட்டா வழங்-கப்படாமல் இருந்தது. கடந்த, சில மாதங்களுக்கு முன்பு வருவாய் துறை அதிகாரிகள் நேரடியாக கிராமத்தில் ஆய்வு செய்-தனர். இதில், 92 பேரில், 45 பேருக்கு மட்டும் வீட்டு மனை பட்டா வழங்கி, 47 பேருக்கு வழங்கவில்லை. இதுகுறித்து பல-முறை அதிகாரிகளிடம் கேட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இது குறித்து, அக் கிராமத்தை சேர்ந்த மணிவேல் கூறு-கையில்,''கடந்த, 35 ஆண்டுகளாக அரசு கொடுத்த இடத்தில் வீடு கட்டி வசிக்கிறோம். ஆனால், சிலருக்கு மட்டும் வீட்டு-மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ளவர்களுக்கு வழங்-கவில்லை. பட்டா கேட்டு தொடர்ந்து போராடி வருகிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் உடனடி-யாக நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us