ADDED : டிச 16, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் முருகர் கோவில் பகுதியில் உள்ள காந்தி நகரில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கேட்வால்வு பழுது காரணமாக கடந்த, 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அருகில் உள்ள தெருக்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வருவதால் சிரமப்படுவதாகவும், எனவே கேட்வால்வு பழுதை சரிசெய்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

