/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டிரான்ஸ்பார்மர் பழுதால் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள்
/
டிரான்ஸ்பார்மர் பழுதால் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள்
டிரான்ஸ்பார்மர் பழுதால் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள்
டிரான்ஸ்பார்மர் பழுதால் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள்
ADDED : ஜன 09, 2026 07:27 AM

அரூர்: அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிடப்பட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாம்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து, மாம்பட்டி, கைலாயபுரம், மத்தியம்பட்டி, சந்திராபுரம், வேட்ரப்பட்டி, கொங்கவேம்பு, தீர்த்தமலை, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, அம்மாபேட்டை கீரைப்பட்டி, கீழ்மொரப்பூர், மாவேரிப்பட்டி, செல்லம்பட்டி, செங்கப்பாடி, சிட்லிங், பாளையம், சித்தேரி ஆகிய கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாம்பட்டி துணை மின் நிலையத்திலுள்ள, 2 டிரான்ஸ்பார்மர்களில், ஒன்றில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், மீதமுள்ள மற்றொரு டிரான்ஸ்பார்மர் மூலம், மின்வினியோகம் நடக்கிறது. பழுதான டிரான்ஸ்பார்மருக்கு பதிலாக, புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, மாற்று டிரான்ஸ்பார்மர் வரும் வரை மேற்படி கிராமங்களுக்கு தற்போதுள்ள ஓரு டிரான்ஸ்பார்மர் மூலம், சுழற்சி முறையில் மும்முனை மின்சாரம், பிறநேரங்களில் இருமுனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விவசாயிகள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

