ADDED : மே 17, 2026 02:17 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சி, 18வது வார்டுக்கு உட்-பட்ட லிங்காபுரத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்-கின்றனர். அரூர் - பேதாதம்பட்டி பிரதான சாலையில் இருந்து, லிங்காபுரத்திற்கு செல்லும் ஒன்றரை கி.மீ., துாரமுள்ள மண்சா-லையில் போடப்பட்ட ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும், குழி-யுமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், அவசர மருத்துவ சிகிச்சைக்கு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்று வரமுடியாத நிலையுள்ளது.
அதே போல், மரவள்ளி
கிழங்கு, கரும்பு உள்ளிட்ட விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். கடந்த, 60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மண்சாலையை தார்ச்சாலையாக சீரமைத்து தரக்கோரி, முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட நிர்-வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், சாலைமறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்-தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் கூறும் பொதுமக்கள், தங்களுக்கு தார்ச்சாலை வசதி செய்து தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விடுத்துள்ளனர்.
