ADDED : ஜூலை 11, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் சென்னையிலுள்ள கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இதேபோல், ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் அரூரில் இருந்து பஸ் மற்றும் மொரப்பூர் சென்று அங்கிருந்து ரயில் மூலம் சென்னை சென்று வருகின்றனர். கடந்த காலங்களில், அரூரிலிருந்து தினமும் இரவு, 10:15 மணிக்கு சென்னைக்கு இயக்கப்படும் அரசு பஸ்சில் பயணம் செய்ய பயண சீட்டு முன்பதிவு வசதி செய்யப்பட்டிருந்தது.
தற்போது, ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி, மிகவும் அவதிக்கு ஆளாகி வருவதாக புகார் கூறும் பயணிகள், மீண்டும் சென்னை செல்லும் அரசு பஸ்சில், பயணசீட்டு முன்பதிவு வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.