/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மழையில் ஒழுகும் அரசு பள்ளி புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
/
மழையில் ஒழுகும் அரசு பள்ளி புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
மழையில் ஒழுகும் அரசு பள்ளி புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
மழையில் ஒழுகும் அரசு பள்ளி புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
ADDED : நவ 13, 2024 07:44 AM
தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே, பழைய ஓட்டு கட்டடத்தில் இயங்கும் அரசு பள்ளி, மழைக்காலத்தில் ஒழுகுவதால், அதை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதஹள்ளி பஞ்., உட்பட்ட கீழ்ஈசல்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், 113 மாணவர்கள் படிக்கின்றனர். மேலும், 6 ஆசிரியர்கள், காலை மற்றும் மதிய உணவு திட்ட சமையலர்கள் உள்ளனர். கடந்த, 20 ஆண்டுக்கு முன், 2 வகுப்பறை ஓட்டு கட்டடம் சேதமடைந்தது. இதை, பலமுறை சீரமைத்தும் தொடர்ந்து, மழை காலத்தில், வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகுவதால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, சேதமடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும். பள்ளிக்கு தண்ணீர் வசதி இல்லாததால், மாணவர்கள் கழிவறைக்கு செல்லும்போது, பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீரை எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது. பள்ளியை சுற்றி அமைத்த சுற்றுச்சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால், ஆங்காங்கே உடைந்து விழுந்துள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கு புதிய கட்டடம், தண்ணீர் வசதி, சுற்றுச்சுவர் ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.