தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நிழற்கூடம் கட்ட கோரிக்கை

நிழற்கூடம் கட்ட கோரிக்கை

நிழற்கூடம் கட்ட கோரிக்கை


ADDED : ஏப் 20, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனைக்கு தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகே, இருந்த நிழற்கூடம் மீது சில ஆண்டுகளுக்கு முன், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், நிழற்கூடத்தின் மேற்பகுதி சேதமடைந்தது. இதையடுத்து, நிழற்கூடம் இடித்து அகற்றப்பட்டது. தற்போது, நிழற்கூட வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக கடும்வெயில் மற்றும் மழையில் காத்திருப்பதால் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகே, நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us