ADDED : பிப் 23, 2026 07:00 AM
தர்மபுரி; தர்மபுரி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அன்ப-ழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 78-வது பிறந்தநாள் விழா பிப்., 24 நாளை செவ்வாய்க்கி-ழமை தர்மபுரி மாவட்டத்தில், அ.தி.மு.க., சார்பில், சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, மாவட்டம் முழுவதும் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கட்சி கொடியேற்றி, ஜெயலலிதாவின் உருவ சிலை மற்றும் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்குக்கு அன்ன-தானம் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். இதில், அந்தந்த பகுதியை சேர்ந்த கட்சி நிர்வா-கிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.அதை தொடர்ந்து, மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நாளை காலை, 10:30 மணிக்கு கொண்டாடப்படுகிறது. இதில், கட்-சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
