ADDED : ஏப் 25, 2026 05:30 AM
அரூர், தர்மபுரி வனக்கோட்டம், அரூர் உட்கோட்டத்தில் அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை ஆகிய, நான்கு வனச்சரகங்கள் உள்ளது. இதில் மான், முயல், காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. தற்போது, நிலவும் கடும் வெயில் மற்றும் வறட்சியால் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் இன்றி காணப்படுகின்றன. இதனால், தண்ணீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி ஊருக்குள் வரும் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் வாகனங்களில் அடிபட்டும், கிணற்றில் விழுந்தும், நாய்களால் கடித்தும் உயிரிழக்கின்றன.
எனவே, வனப்பகுதிகளில் இருந்து விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில், வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுப்பதுடன், வனப்பகுதிகளில் விலங்குகளுக்கு தேவையான தீவனங்களையும் உற்பத்தி செய்ய வேண்டும் என வனவிலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம், வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வெளி வருவதை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தனர்.
